நடிகர் சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் கங்குவாடீசரை வெளியிட்ட படக்குழு

Update: 2024-03-20 06:09 GMT

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா - நடிகர் சூர்யா கூட்டணியில் கங்குவா திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிபார்க்கப்படும் நிலையில், படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே கங்குவா திரைப்படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை, ஓடிடி தளமான அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது. திரையரங்குகளில் படம் வெளியான பின்னர் தங்கள் தளத்தில் வெளியாகும் என, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்