மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (10-05-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-10 11:03 GMT

வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுவது உண்மைகளுக்கு புறம்பானது...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம்...


ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சிகள் நன்கு அறிவர்...

வாக்குகள் எண்ணும்போது EVM-ல் பதிவான வாக்குகளும், 17சி படிவத்தோடு வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்களின் முன் சரிபார்க்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தகவல்...


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின்...

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...


நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில், வீட்டருகே உள்ள கிணற்றில் இருந்து கத்தி மீட்பு.....

முக்கிய தடயங்கள் கிணற்றில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர தேடுதல்....


10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2 முதல் துணைத் தேர்வு.....

துணைத் தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை தகவல்....


ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை, குஜராத் அணிகள் மோதல்....

அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பம்.....

Tags:    

மேலும் செய்திகள்