இன்றைய தலைப்பு செய்திகள் (10-05-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-10 14:05 GMT

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்...

அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு...


ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் குடியிருக்கும் பூர்வகுடிகள் வெளியேற்றம்...

வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதால் களேபரம்...


செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள், ஆண்டுதோறும் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்...

இணையவழியில் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு...


நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில், வீட்டருகே உள்ள கிணற்றில் இருந்து கத்தி மீட்பு...

முக்கிய தடயங்கள் கிணற்றில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசாரின் தேடுதல் தீவிரம்...


அட்சய திருதியை தினத்தையொட்டி, நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்...

விலை உயர்வை பொருட்படுத்தாமல், ஆர்வமுடன் நகைகளை வாங்கும் பொதுமக்கள்...


இந்து நம்பிக்கைகளை அழிக்க, சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது, காங்கிரஸ் கட்சி என, பிரதமர் மோடி குற்றச்சாட்டு...

தோல்வி பயத்தால், அதானி, அம்பானி குறித்து பேச தொடங்கியிருக்கிறார் பிரதமர் மோடி என, ராகுல்காந்தி விமர்சனம்...

Tags:    

மேலும் செய்திகள்