நியூசிலாந்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரபல இயக்குனர் : அவதார் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டம்

அவதார் 2 படப்பிடிப்பு பணிகளுக்காக நியூசிலாந்து சென்ற பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரான், அங்கு தனிமைப்படுத்தப்பட்டார்.

Update: 2020-06-03 03:39 GMT
அவதார் 2 படப்பிடிப்பு பணிகளுக்காக நியூசிலாந்து சென்ற பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரான், அங்கு தனிமைப்படுத்தப்பட்டார். பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் அவதார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் தடைப்பட்டது. இந்த நிலையில் நியூசிலாந்தில் நிலைமை கட்டுக்குள் வந்ததால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரான் நியூசிலாந்து சென்றார். வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால் அரசின் விதிமுறைப்படி அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்