திருச்சியில் குடிநீர் பிரச்னையை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம், தலைவிரித்தாடுவதால், தலைநகரை தாண்டி தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு உத்தரவுகளை, மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பிறப்பித்துள்ளார்.
திருச்சியில் குடிநீர் பிரச்னையை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு
x
சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம், தலைவிரித்தாடுவதால், தலைநகரை தாண்டி தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு உத்தரவுகளை, மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். அதன்படி, திருச்சி மாநகராட்சியில், குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க, உதவி பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, மாநகர ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும், 65 நபர்கள் அடங்கிய கள ஆய்வு குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் திருச்சி மக்களின் குடிநீர் தேவை தொடர்பான குறையை உடனுக்குடன் நிவர்த்தி செய்வர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை மாநகராட்சி மைய அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் தெரிவிக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்