விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் பத்திரப்பதிவுக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்கக் கோரி , ஆபேசா தக்கா தெரு, இந்திராகாந்தி வீதி, காவேரி வீதி, கங்கை வீதி, யமுனை வீதி, விராட்டிக்குப்பம் பாதை, தென்றல் தெரு உள்ளிட்ட பல்வேறு வீதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர்,தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.தேர்தலுக்குள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.