மருத்துவமனையில் இருந்து 8 மாத குழந்தை கடத்தல் - 24 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசார்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட 8 மாத குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார், குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து 8 மாத குழந்தை கடத்தல் - 24 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசார்
x
திருப்பூரை சேர்ந்த செல்வராணி - செல்வம் தம்பதிக்கு, 8 மாதத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.  இந்த நிலையில், அவர்களுக்கு அறிமுகமான விக்னேஷ் என்கிற நபர், வேலை வாங்கித் தருவதாக கூறி, தனது மனைவி பிரபாவதியுடன் செல்வம் வீட்டிற்கு வந்துள்ளார். குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய அவர்கள், அடுத்த நாள் காலை குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்கலாம் என கூறி செல்வம் மற்றும் செல்வராணி தம்பதியை, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு, அவர்களின் கவனத்தை திசை திருப்பி , ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு விக்னேஷ் தம்பதி மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளது. குழந்தை கடத்தப்பட்டதை அடுத்து, தனிப்படை அமைத்த போலீசார் சிசிடிவி காட்சிகள், செல்போன் அழைப்புகளை வைத்து திருவாரூர் மாவட்டம்  திருத்துறைப்பூண்டி அருகே பிரபாவதி - விக்னேஷ் தம்பதியை கைது செய்து குழந்தையை மீட்டனர். கடத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாருக்கு உயரதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்