ரஷ்ய ஜாம்பவானின் சாதனையை முறியடித்த இந்திய வீரர் குகேஷ் - வைரலாகும் 3 வார்த்தை பதிவு

Update: 2024-04-24 07:42 GMT

கனடாவில் நடந்த கேன்டிடேட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷ், உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சீன வீரர் டிங் லிரனுடன் மோதவுள்ளார். இளம்வயதில் கேன்டிடேட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமையை பெற்றிருந்த, ரஷ்ய வீரர் கேரி காஸ்பரோவின் சாதனையை குகேஷ் முறியடித்தார். இந்நிலையில் முன்னாள் சாம்பியனான காஸ்பரோவ், குகேஷை இந்தியாவின் பூகம்பம் என்று எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார். மேலும் அமெரிக்கா, இங்கிலாந்தின் பல முன்னணி செஸ் இளம் வீரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்களின் செஸ் மீதான ஆர்வம் மற்றும் சாதனைகளை கவனித்து வருவதாகவும் காஸ்பரோ தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்