காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25-04-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-25 06:02 GMT

உடல் பருமன் சிகிச்சையின் போது புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரம்...

2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து, 2 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க சுகாதாரத்துறை உத்தரவு...


நாளை, 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு...

கேரளாவில் 20 தொகுதிகளுக்கு ஒரே கட்ட தேர்தல்...

கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் உள்பட14 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு...


பிரதமர் நாற்காலியை ஏலம் விடுவதிலேயே இந்தியா கூட்டணியினர் மும்முரமாக இருப்பார்கள் என்று பிரதமர் மோடி விமர்சனம்...

உண்மையான பிரச்சனைகளில் இருந்து, மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் பிரதமர் மோடி என்று, பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு...


இந்தாண்டு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் குறித்த திருத்தப்பட்ட புதிய அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி...

தேர்வு திட்ட நடைமுறையிலும் திருத்தம்...

9 ஆயிரத்து 283 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவிப்பு...


மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்குப் பொருத்தி சாதனை...

2வது முறையாக சாதனை படைத்துள்ள அமெரிக்க மருத்துவர்கள்...


ஐ.பி.எல். 40வது லீக் ஆட்டத்தில், நான்கு ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி...

போராடி தோற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி...

Tags:    

மேலும் செய்திகள்