ஐசரி கணேஷின் தாயார் புஷ்பா காலமானார் | முக்கிய பிரபலங்கள் நேரில் அஞ்சலி

Update: 2022-07-14 21:47 GMT

ஐசரி கணேஷின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏவும், நடிகருமான ஐசரி வேலனின் மனைவி புஷ்பா, வயது முதிர்வால் காலமானார். அவருக்கு வயது 75. சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் பிரபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இயக்குநர் ஷங்கர், ஜீவா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த புஷ்பாவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்