உலகின் முதல் மின்சார சரக்கு கப்பல் - தானியங்கி முறையில் இயங்கும் யாரா பிர்க்லாந்த்

உலகின் முதல் மின்சார சரக்குக் கப்பல், நார்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தானியங்கி முறையில் இயங்கும் திறன் கொண்டது.

Update: 2021-11-20 13:58 GMT
80 மீட்டர்கள் நீளமும், 3200 டன்கள் எடையும் கொண்ட யாரா பிர்க்லாந்த் என்ற மிகப் பெரிய சரக்கு கப்பல், முற்றிலும் தானியங்கி முறையில், பேட்டரிகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தில் இயங்குகிறது. இதன் முதல் பயணத்தில், 120 கன்டெய்னர்கள் உரத்தை ஏற்றிக் கொண்டு, போர்ஸ்கிரனில் இருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள ப்ரெவிக் துறைமுகத்தை சென்றடைந்தது. டீசல் மூலம் இயங்கும் 40,000 டிரக்குகள், ஒரு ஆண்டில் கொண்டு செல்லும் சரக்குகளை, இதன் மூலம் அதே காலகட்டத்தில் சுற்றுச்சூழல் கேடுகள் ஏற்படுத்தாமல் கொண்டு செல்ல முடியும்.  சென்சார்கள் மூலம், ஓட்டுநர், மாலுமிகள், ஊழியர்கள் இல்லாமல், தானியங்கி முறையில் இதை செலுத்தும் சோதனைகள், விரைவில் நடத்தப்பட உள்ளன. அடுத்த சில வருடங்களில், ஊழியர்கள் யாருமே இல்லாமல், இது இயக்கப்படும் என்று யாரா நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்