மனித மூளையில் சிப்-இயந்திரத்துடன் இணைப்பு - அற்புதமா?ஆபத்தா?

மனித மூளையை சிப் மூலமாக இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங்க் திட்டம் குரங்கிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றியடைந்துள்ள நிலையில் இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

Update: 2021-04-22 07:37 GMT
மனித மூளையை சிப் மூலமாக இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங்க் திட்டம் குரங்கிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றியடைந்துள்ள நிலையில் இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

அறிவியல் திறன் எத்தனை அபாரமானது.அசாத்தியமானவற்றையும் சாத்தியமாக்கும் அற்புத வரப்பிரசாதம்.

ஆனால் அறிவியல் நன்மைக்குத்தான் என்றாலும், மனிதர்களின் பேராசையால் அதற்கு கோரமுகமும் உண்டு.

அந்த வகையில், இந்த நியூராலிங்க் தொழில்நுட்பத் திட்டம் வரமா சாபமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது

தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்சின் நிறுவனர் எலான் மஸ்க்-இன் மற்றொரு நிறுவனம்தான் நியூராலிங்க். மனித மூளையில் சிப் பொருத்தி மனிதனை இயந்திரத்தோடு இணைக்கும் தொழில்நுட்பமே நியூராலிங்க் திட்டம்...

பேஜர் என்னும் மக்காக் இன வகையைச் சேர்ந்த 9 வயது குரங்கிற்கு மூளையின் இரு புறங்களிலும் 6 வாரத்திற்கு முன்பு சிப் ஒன்றை பொருத்தியுள்ளனர்...

கணினியைக் கற்றுக் கொண்ட அந்தக்குரங்கு, வீடியோ கேம் ஒன்றை ஜாய் ஸ்டிக் உதவியுடன் விளையாடுகிறது... பந்தை ஆரஞ்சு நிறப் பெட்டிக்குள் போடும் போதெல்லாம் அதற்கு வாழைப்பழக் கூழ் வழங்கப்படுகிறது...

குரங்கு ஆரஞ்சு பெட்டிக்குள் பந்தை போடுகையில், அதன் மூளையில் உருவாகும் சமிஞ்சைகள் மூளையில் பொருத்தப்பட்டுள்ள சிப் மூலமாகக் கணிணிக்குக் கடத்தப்படுகின்றன. ஜாய் ஸ்டிக்கை அசைப்பதற்கு குரங்கின் மூளை இட்ட கட்டளைகளை விஞ்ஞானிகள் கணினி ப்ரோகிராமாக மாற்றி அதை சிப்பில் பதிய வைக்கின்றனர்...

இதனால் குரங்கு தான் நினைத்தவுடனேயே, ஜாய் ஸ்டிக்கின் உதவி இல்லாமலேயே ஆரஞ்சுப் பெட்டிக்குள் பந்தைப் போட முடிகிறது... 



மனிதர்களின் மூளையில் ஒரு சிறிய துளையிட்டு, இந்த சிப்பை எளிதாகப் பொருத்தி விடலாம்... இந்த சிப்பில் இருக்கும் 3000 எலக்ட்ரோட்கள் மூளையுடன் இணைக்கப்படும்... 

இதனால் மனித குலத்திற்கு விளையப்போகும் நன்மைகளைப் பற்றி இலான் மஸ்க் பட்டியலிடுகிறார்... அதன்படி, இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் இந்த சிப் கருவியைப் பொருத்துவதால், கணினியின் உதவியுடன் ஸ்மார்ட் ஃபோனை இயக்குவது, மற்றும் செயற்கை உறுப்புகளை மூளையின் கட்டளைக்கேற்ப தானாக இயக்கி எல்லா விஷயங்களையும் மற்றவர்களின் உதவி இல்லாமலேயே செய்து கொள்வது உள்ளிட்ட அசாத்தியமான விஷயங்களைச் சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறார்... 

இதையும் தாண்டி இந்தத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் நினைவுகளை பிரதி எடுத்து, கடந்த காலத்தில் நடந்தவற்றை திரைப்படத்தைப் பார்ப்பதைப் போல ஓட்டிப் பார்க்க முடியும்... கேட்கவே தலை கிறுகிறுக்க வைக்கிறதல்லவா???

எல்லாம் சரிதான்... நியூராலிங்க் போன்ற திட்டங்கள் நனவாவதால் மனிதர்களின் மூளை இயற்கைக்கு முரணாக எந்திரத்தால் கட்டுப்படுத்தப்படும் நிலை வந்து, எந்த ஒரு உடல் உழைப்பும் இல்லாமல் நாம் இன்னும் உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் சந்தேகம் வருகிறது...

மனிதர்கள் இயந்திரங்களைக் கட்டுப்படுத்தும் காலம் போய், மனிதர்களை இயந்திரங்கள் கட்டுப்படுத்தும் காலம் வந்து விட்டதை நினைத்தால் தான் இனம் புரியா பயம் ஏற்படுகிறது...
பொறுத்திருந்து பார்க்கலாம்... இந்தப் புதிய கண்டுபிடிப்பு அற்புதமா... ஆபத்தா என்று...

Tags:    

மேலும் செய்திகள்