பிரேசிலில் கடும் வெள்ளப்பெருக்கு - ஆக்ரி மாகாணத்தில் அவசரநிலை

பிரேசிலின் ஆக்ரி மாகாணத்தில் கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-02-23 05:17 GMT
பிரேசிலின் ஆக்ரி மாகாணத்தில் கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கிராமங்களையும், விவசாயங்களையும் மூழ்கடித்துள்ளது. சாலைகளிலும், தெருக்களும் வெள்ளநீர் ஆறாக ஓடுகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் துறு துறுவென தனது தாயை சுற்றி வரும் பனிக்கரடி குட்டி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. தலைநகரான கோபஹேகனில் உள்ள உயிரியல் பூங்காவில் பனிப்பொழிவுக்கு இடையே தனது தாயுடன் இரண்டு வயதான பனிக்கரடி குட்டி உலா வருகிறது. 

ஸ்பெயினில் உள்ள வேலன்சியா நகரில் மரங்களை குலுக்கி, ஆரஞ்சுப் பழங்களை, டிராக்டர் போன்ற வாகனம் பறிக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ, அதிக லைக் மற்றும் ரீ-டுவீட்களை பெற்றுவரும் நிலையில், ஆரஞ்சு அறுவடை இந்த ஆண்டு குறைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள சுகாதார அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தலைநகர் லா பாசில் நடந்த போராட்டத்தில், போலீசாருடன், போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

பிரபல ராப் பாடகர் பாப்லோ ஹேசலை வி​டுவிக்க கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சிறையில் உள்ள பாடகரை விடுவிக்க வேண்டும் என, போராட்டக்காரர்கள் போலீசார் மீது, பாட்டில்கள், கற்கள் மற்றும் காலி குளிர்பான கேன்களை, வீசினர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார், அவர்கள் மீது, தடியடி நடத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்