துபாய் இளவரசர் உடன் போட்டி போட்ட நெருப்பு கோழிகள்

நெருப்புக்கோழியுடன் பந்தயம் செல்வது போல் துபாய் பட்டத்து இளவரசர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2021-01-03 08:43 GMT
நெருப்புக்கோழியுடன் பந்தயம் செல்வது போல் துபாய் பட்டத்து இளவரசர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. துபாயில் பிரபலமான அல்குத்ரா ஏரி பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த பகுதியாகும்.  இங்கு, சைக்கிள் பயணம் செல்வதை வழக்கமாக வைத்துள்ள துபாய் இளவரசர் ராஷித் அல் மக்தூம், கடந்த ஒன்றாம் தேதி, தமது குழுவினருடன் பயணம் மேற்கொண்டார். அப்போது திடீரென்று 2 நெருப்புக்கோழிகள் அவருக்கு, இணையாக ஓடின. இந்த காட்சியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்