கொரோனா தொற்று வேகமாக பரவுவதை தடுக்க நடவடிக்கை - இலங்கை ராணுவ தளபதி உறுதி

இலங்கையில் கொரோனா தொற்று சமூகத்தில் மிக விரைந்து பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொரோனா தடுப்புப் படையின் தலைவரும், ராணுவத் தளபதியுமான லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-06 11:04 GMT
இலங்கையில் கொரோனா தொற்று சமூகத்தில் மிக விரைந்து பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொரோனா தடுப்புப் படையின் தலைவரும், ராணுவத் தளபதியுமான லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு புறநகரான மினுவங் கொடை பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் ராணுவத்தின்  உதவியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மினுவங்கொட ஆடைத் தொழிற் சாலையில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்த தொழிற்சாலையில் தொழில் புரிந்து  வரும் 1400 ஊழியர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளதாகவும் நேற்று நள்ளிரவு வரை 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  


Tags:    

மேலும் செய்திகள்