'போர்ட்நைட்' அமெரிக்க ஆன்-லைன் வீடியோ கேம் - ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கை

ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்களின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக அமெரிக்காவைச் சேர்ந்த வீடியோ கேம் நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.

Update: 2020-08-26 04:40 GMT
எபிக் கேம்ஸ்  என்ற நிறுவனத்தால் 2017 ஆம் ஆண்டு 'போர்ட்நைட்' என்ற அமெரிக்க ஆன்லைன் வீடியோ கேம் உருவாக்கப்பட்டது. ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து 4 பேர் ஆன்லைன் மூலம் இணைந்து விளையாடக்கூடிய இந்த விளையாட்டை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டரை கோடி பேர் விளையாடி வருகின்றனர். இந்த ஆன்லைன் வீடியோ கேம் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் 180 கோடி அமெரிக்க டாலர் லாபத்தை ஈட்டியது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கமிஷன் பணத்தை செலுத்தாமல்,  போர்ட்னைட் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாக கட்டணங்களை பெற தொடங்கியது. விதிமுறையை மீறிய காரணத்திற்காக 'போர்ட் நைட்' வீடியோ கேமை தனது ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியது. தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இருந்தும் இந்த கேம் நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து எபிக் கேம்ஸ் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் அப் ஸ்டோர் தொடர்பான கட்டண நடைமுறைகளுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்