8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற முடிவு? - வரைவு மசோதாவுக்கு குவைத் நாடாளுமன்ற குழு ஒப்புதல்

குவைத் மக்கள் தொகையில் 15 சதவீதத்தினருக்கு மேலாக பிற நாடுகளை சேர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது என்ற வரைவு மசோதாவுக்கு குவைத் நாடாளுமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2020-07-07 10:41 GMT
குவைத் மக்கள் தொகையில் 15 சதவீதத்தினருக்கு மேலாக பிற நாடுகளை சேர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது என்ற வரைவு மசோதாவுக்கு குவைத் நாடாளுமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால்  அங்குள்ள 14 புள்ளி 50 லட்சம் இந்தியர்களில் 8 லட்சம் பேர் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் குவைத்தில் வாழும் மக்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொகை 36 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 8 லட்சம் பேர் குவைத்தை விட்டு வெளியேற்றப்படும் போது வருவாய் இழப்புடன், அவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பையும் உருவாக்கும் நிலை ஏற்படும்.
Tags:    

மேலும் செய்திகள்