கொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்

கொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாசமான விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.

Update: 2020-06-02 12:13 GMT
எட்டு வயது சுட்டியின் அட்டகாச சமையல்...

கொரோனா காலகட்டத்தில் நடிகைகள் பலரும் சமையல் நிபுணர்களாக மாறியது நமக்குத் தெரியும். அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டிருக்கிறாள் இந்த 8 வயது குட்டிப் பெண். மியான்மர் நாட்டைச் சேர்ந்த இந்தக் குழந்தையின் பெயர் Moe Myint May Thu. ஹோம் வொர்க் எழுதவே தடுமாறக் கூடிய இந்த பிஞ்சுக் கைகளால் ஒரு ஊருக்கே இந்தக் குழந்தை சமைப்பதும், கச்சிதமான அளவில் காரம் உப்பை எடுத்துப் போடுவதும் உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆகியிருக்கிறது.


பவுன்டரி நோக்கி ஓடும் மனிதப்பந்து...

ரூம் போட்டு யோசிப்பார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் டிக் டாக் வீடியோக்களில் ஒன்று இது. கிராமத்து கிரிக்கெட்டில் ஒரு வீரரையே பந்தாக்கி அடித்தால் அவர் யார் கையிலும் சிக்காமல் வளைந்து நெளிந்து பவுண்டரிக்கு ஓடிவிடுவார் தானே?


அரை டவுசர் கிரிக்கெட்டில் "ரீப்ளே"...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எல்லாம் இப்போதைக்கு நடப்பது மாதிரி தெரியவில்லை. அதனால்தான், சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயர் முடிவை மறு பரீசலனை செய்யும் ரீ ப்ளே தொழில்நுட்பத்தை எல்லாம் வெறும் கைகளில் காட்டுகிறார்கள் இந்த இளைஞர்கள். இந்திய அணி வீரர்களான அஷ்வின், வ்ருத்திமான் சாகா போன்றவர்கள் கூட கமென்ட் போட்டு ரசித்த வீடியோ இது.
Tags:    

மேலும் செய்திகள்