பணத்தின் மூலம் பரவுமா கொரோனா ? - மருத்துவமனைகளில் பெற்ற பணத்தை தீயிட்டு கொளுத்திய சீனா

கொரோனா அச்சம் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், பணத்தின் மூலம் பரவுமா என்கிற அச்சமும் மக்களிடம் எழுந்துள்ளது.

Update: 2020-03-20 10:11 GMT
உலோகம், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றில் கொரோனா கிருமிகள் 9 நாட்கள் வரை உயிர்வாழும் என கண்டறியப்பட்டதுடன், 
காகித அட்டைகளில் 24  மணி நேரம் உயிர்வாழும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதில் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்துக்கு பின் சீனாவில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப்பணம் புதிதாக மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், கடைகளில் பெறப்பட்ட நோட்டுகளை சீன வங்கி தீயிட்டு எரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. ஈரானில், காகித பண பயன்பாட்டை குறைத்துக் கொள்ள மக்களுக்கு அந்த நாடு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் தற்போது பல நகரங்களில் டாலர் நோட்டுகள் பெறுவதை வர்த்தக நிறுவனங்கள் தவிர்த்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவதற்கு மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்