இலங்கையில் திடீர் இனக்கலவரம் - பதற்றம்

இலங்கையின் மேல்மாகாணத்தில் திடீர் இனக்கலவரம் வெடித்ததால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

Update: 2019-05-14 02:42 GMT
கடந்த சிலநாட்களாக முகநூல் பக்கங்களில் இருதரப்பினர் மாறி மாறி தவறான கருத்துக்களை பதிந்து வந்தனர். இதனை தொடர்ந்து மேல்மாகாணத்தில் உள்ள கம்பஹ, மீனுவாங்கொட ஆகிய பகுதிகளில் பதற்றமான சூழல் உருவானது. அந்த பகுதியில் ஒருதரப்பினரின் கடைகள் தாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில்  இன்று பிற்பகல் குருநாகல பகுதியில் கலவரம் மூண்டது. 15க்கும் மேற்பட்டவர்கள் ஆட்டோவில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன்  வந்து  ஒருவருடைய கடையை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து நடைபெற்ற மோதலில், பசூல் ஹமீது என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.   இதனால் அந்த பகுதியிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து 15க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கு ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புக்கு பிறகு இலங்கையில் சற்று அமைதி நிலவி வந்த நிலையில்  மேல்மாகாணம் பகுதியில் கலவரம் வெடித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்