கொழும்பு : கடல்பகுதியில் துறைமுக நகரம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் செயலகம் முன்பு உள்ள கடல் பகுதியில் சீனாவின் ஒத்துழைப்புடன் துறைமுக நகரை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2019-01-17 04:33 GMT
இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் செயலகம் முன்பு உள்ள கடல் பகுதியில் சீனாவின் ஒத்துழைப்புடன் துறைமுக நகரை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சர்வதேச தரத்தில் கட்டுமானங்கள் அமைவதுடன் மருத்துவமனை, பள்ளிக்கூடம், ஒருங்கிணைந்த வீடுகள் உள்ளிட்டவை உருவாக்கப்படுகிறது. இதற்காக கடலுக்குள் நிலப் பகுதிகளை உருவாக்கும் முதல் கட்டப் பணி நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சீனத் தூதர் செய் யுவான் ஆகியோர் கலந்து கொண்டனர். 269 ஹெக்டேர் கடல் பகுதி  நிலமாக மாற்றப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட பணி விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் அங்கிருந்த கப்பலுக்கு பிரியா விடை கொடுக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்