கூகுள் நிறுவனத்தின் அடுத்த மாஸ்டர் பிளான் - வெளியான தகவல்

Update: 2024-04-27 12:18 GMT
  • உலகின் மிகப் பெரிய இணையவெளி தேடுதல் எந்திரமான
  • கூகுளை ஒவ்வொரு விநாடியும் 99 ஆயிரம் பேர்
  • பயன்படுத்துகின்றனர். கூகுளுக்கு சொந்தமான ஜிமெயில்,
  • யுட்யூப் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தினமும் பல
  • நூறு கோடி மெகா பைட்கள் அளவுக்கு டேட்டா
  • சேமிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில், பிரம்மாண்டமான அளவில் ஒரு புதிய டேட்டா மையத்தை 200 கோடி டாலர் முதலீட்டில் உருவாக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய ரூபாயின் இதன் மதிப்பு16 ஆயிரத்து 680 கோடி ரூபாயாக உள்ளது. கூகுள் கிளவுட் (cloud) மற்றும் செயற்கை நுண்றிவு தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க இந்த மையம் உதவும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே இன்டியானா மாகாணத்தில், ஆயிரத்து 100 கோடி டாலர் செலவில், ஒரு பிரம்மாண்டமான டேட்டா மையத்தை அமேசான்
  • நிறுவனம் உருவாக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது
  • குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்