"இன்று அல்லது நாளை இலங்கை பிரதமராகிறார், ரணில்"

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் 122 எம்.பி.க்கள் ஆதரவோடு நிறைவேறியதாக, சபாநாயகர் ஜெயசூர்யா நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Update: 2018-11-16 21:37 GMT
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் 122 எம்.பி.க்கள் ஆதரவோடு நிறைவேறியதாக, சபாநாயகர் ஜெயசூர்யா நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதையடுத்து, ராஜபக்சே பெரும்பான்மையை இழந்துள்ளார். அதே நேரத்தில், ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பெரும்பான்மையை விட 9 பேரின் ஆதரவு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இன்று அல்லது நாளை, இலங்கையின் 23வது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுக் கொள்வார் என தெரிகிறது. அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக அதிபர் மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்