ஸ்ரீ சேனா - ராஜபக்சே அவசர சந்திப்பு

இலங்கை அதிபர் மைத்திர பால ஸ்ரீ சேனாவை, அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற மஹிந்தா ராஜபக்சே, கொழும்பில் அவசரமாக சந்தித்தார்.

Update: 2018-11-09 14:05 GMT
இலங்கை அதிபர் மைத்திர பால ஸ்ரீ சேனாவை, அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற மஹிந்தா ராஜபக்சே, கொழும்பில் அவசரமாக சந்தித்தார். நாடாளுமன்றம் வருகிற 14 ம் தேதி கூடவுள்ள சூழலில், போதிய அளவுக்கு, எம்பிக்களின் ஆதரவு, ராஜபக்சேவுக்கு கிடைக்கவில்லை என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ரணில் விக்ரமசிங்கேவை வீழ்த்த, ராஜபக்சே வகுத்த வியூகம் குறித்து, இந்த சந்திப்பில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதனிடையே, இலங்கை நாடாளுமன்றத்தை தாமதம் செய்யாமல் உடனடியாக கூட்டி, யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்ற பலப்பரீட்சை நடத்துமாறு, அந்நாட்டு அரசுக்கு, ஐரோப்பிய யூனியன்
கோரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்