சாலைகளில் சிதறிய நிலக்கரி - அடுத்தடுத்து விழுந்த 10 பேர்.. - துறைமுக அதிகாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

Update: 2024-04-27 14:15 GMT

புதுச்சேரி மாநிலம் வாஞ்சூர் பகுதியில் அதானிக்கு சொந்தமான தனியார் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் வழியாக அரியலூர் பெரம்பலூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகள் முழுமையாக மூடப்படாமல் உள்ளதால் அதிலிருந்து நிலக்கரித் துகள்கள் சாலையில் சிதறி விழுகின்றன. காரைக்கால் அம்பாள் சமுத்திரம் பகுதியில் நிலக்கரி அதிகளவில் சாலையில் சிதறிக் கிடப்பதால் ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தின... இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது... அப்போது பெரிய எல்இடி திரையில் விபத்து நடைபெற்ற சிசிடிவி காட்சிகளை ஒளிபரப்பு செய்து துறைமுக அதிகாரிகளிடம் ஆட்சியர் விளக்கம் கேட்டார். மேலும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சரமாரி கேள்விகளை அடுக்கினார்... அத்துடன் துறைமுகம் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.... சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்