பெண்கள் ஹாஸ்டலில் ஆண் நடமாட்டம்.. கையும் களவுமாக சிக்கிய சென்னை பெண் IT ஊழியர்.. பின்னணியில் பகீர்

Update: 2024-04-25 07:18 GMT

இளம்பெண்கள் தங்கியிருந்த விடுதி அறையில், கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்த சம்பவத்தில், பெண் ஐடி ஊழியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில், ஆண் நபர்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அந்த விடுதியில் போலீசார் சோதனை செய்தபோது, ஒரு அறையில் இருந்து ஒரு கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்த அறையில் வசித்த இளம்பெண்ணிடம் விசாரித்தபோது, புதுக்கோட்டையை சேர்ந்த ஷர்மிளா என்பதும், பட்டதாரி பெண்ணான அவர், ஓஎம்ஆர் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. நண்பரும், கால் டாக்சி ஓட்டுநருமான சுரேஷ் என்பவர் கஞ்சாவை கொடுத்ததாகக் கூற, சுரேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கால் டாக்சி ஓட்டுநர் என்ற போர்வையில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் கஞ்சாவை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கும் வேலையை சுரேஷ் செய்து வந்தது விசாரணையில் உறுதியானது. இதனைத் தொடர்ந்து, பெண் ஐ.டி. ஊழியர் ஷர்மிளா மற்றும் சுரேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்