"மருத்துவ தரவரிசைப்பட்டியலில் பெயர் இல்லை" - சேலம் மாணவி புகார்

மருத்துவ படிப்புக்கான 7 புள்ளி 5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக சேலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-01-25 13:33 GMT
மருத்துவ படிப்புக்கான 7 புள்ளி 5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக சேலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் கரிக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மகள் கஸ்தூரி, நீட் தேர்வில் பங்கேற்று 252 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7புள்ளி 5 சதவிகித இட ஒதுக்கீட்டில் இடம் பெற எம்பிசி பிரிவில் 230 மதிப்பெண்கள் பெற்றாலே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனது பெயர் தரவரிசைப்பட்டியலில் இடம்பெறவில்லையென சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மாணவி புகார் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரிடம் தந்தி டிவி கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த மருத்துவ கல்வி இயக்குனரகம், 
சேலம் மாணவி அரசு பள்ளியில் படித்தார் என்பதற்கான சான்றிதழை சமர்பிக்காததால் 7புள்ளி 5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாணவி பெயர் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளது.  கலந்தாய்வுக்கு முன்னதாக சேலம் மாணவி சான்றிதழை சமர்ப்பித்தால் 7புள்ளி 5 சதவிகித இட ஒதுக்கீட்டு பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என  இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்