யானை சாணத்தில், அரைக் கிலோ பிளாஸ்டிக்.. யானை தின்ற பால் பாக்கெட், மாஸ்க், நாப்கின்

யானை சாணத்தில், அரைக் கிலோ பிளாஸ்டிக்.. யானை தின்ற பால் பாக்கெட், மாஸ்க், நாப்கின்

Update: 2022-01-10 07:37 GMT
யானை சாணத்தில், அரைக் கிலோ பிளாஸ்டிக்.. யானை தின்ற பால் பாக்கெட், மாஸ்க், நாப்கின்  

யானை சாணத்தில், அரைக் கிலோ அளவுக்கான பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவை மாவட்டம் மருதமலை சாலையில், யானை சாணத்தை பார்த்த வன உயிரின ஆர்வலர் குழு, அதில், பெரிய அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை கண்டுபிடித்துள்ளது. அதில், பெண்களின் கொண்டை பூ, நாப்கின்ஸ், குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஹக்கீஸ், மாஸ்க், பால் பாக்கெட் உள்பட ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள், ஒருதடவை எச்சத்தில், அரைக் கிலோ அளவுக்கு இருந்ததை பிரித்து எடுத்த வன உயிரின ஆர்வலர் முருகானந்தம் குழு, சோமயம்பாளையம் பகுதியில் அமைத்த குப்பை மேட்டை அகற்றுமாறு வலியுறுத்தினார். எதிர்ப்பை மீறி குப்பைமேடு அமைத்ததை சுட்டிக்காட்டிய அவர்கள், யானை உயிரிழந்தால் தான் நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் வினவினார். இந்தக் காட்சியை சமூக வலை தளத்தில், பலரும் பகிர்ந்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்