ஜெயலலிதா வீடு - அதிரடி தீர்ப்பு

ஜெயலலிதா வீடு - அதிரடி தீர்ப்பு

Update: 2021-11-24 09:15 GMT

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. 

அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலைய சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டன.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், வேதா நிலையத்துக்கு இழப்பீடாக உரிமையியல் நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யப்பட்ட 67 கோடியே 90 லட்சம் ரூபாயை அரசுக்கு திருப்பி வழங்க வேண்டும் எனவும்,

வேதா நிலையத்தின் சாவியை மூன்று வாரங்களில் மனுதாரர்களான தீபா, தீபக் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை சட்டப்படி வசூலிக்க வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்