வரி ஏய்ப்பு புகார்- வருமானவரித்துறை சோதனை : திமுக இளைஞரணி அமைப்பாளர் வீட்டிலும் சோதனை

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னையில் இரண்டு பிரபல தனியார் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-11-17 13:21 GMT
வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னையில்  இரண்டு பிரபல தனியார் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் வசந்தம் ப்ரமோட்டர்ஸ் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் ஜவகர்.  இவரது அலுவலகத்தில் இன்று காலை முதல்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆறுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் அதிபரான ஜவகர் கடந்த 2017ஆம் ஆண்டு "பயமா இருக்கு" என்கிற திரைப்படத்தை தயாரித்து இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், சென்னை மேற்கு அண்ணாநகர் பகுதியில் லோகேஷ் என்பவர் நடத்தி வரும் மகாலட்சுமி பில்டர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். லோகேஷ், சென்னை கிழக்கு பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.இவருக்கு சொந்தமான இடங்களிலும்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகள் என மொத்தம் எட்டு இடத்தில் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்