சென்னை ஐஐடி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 45 நாய்கள் மரணம் - விலங்குகள் நல ஆர்வலர் புகார்

சென்னை ஐஐடி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 45 நாய்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

Update: 2021-10-17 03:03 GMT
சென்னையில் 236 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள ஐஐடி வளாகத்தில், பாதுகாக்கப்பட்ட இனமான கலை மான்கள், புள்ளி மான்கள், குரங்குகள், காட்டுப் பூனைகள் உட்பட பலவகை வன உயிரினங்கள் உள்ளன. 

இதற்கிடையே அங்கு பெருகிவரும் தெருநாய்கள் மான்களை வேட்டையாட அவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் 75 புள்ளி மான்கள், 3 கலைமான்கள் உயிரிழந்திருப்பதாக ஆர்.டி.ஐ. தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந்த நாய்களில் 45 நாய்கள் இறந்துவிட்டதாக பெங்களூருவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஹரீஷ் கொடுத்த புகாரில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து ஐஐடி பதிவாளர் பிரசாத் அளித்துள்ள விளக்கத்தில் நாய்கள் நன்றாக பராமரிக்கப்படுவதாகவும், தவறாமல் உணவு வழங்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

இதுபோன்ற புகார்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றொரு தரப்பு விலக்குகள் நல ஆர்வலர்கள், ஐஐடி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

"நாய்களை வளர்ப்பது ஐஐடி வேலையல்ல"
"ஐஐடி நிர்வாகம் முடிந்ததை செய்து வருகிறது"
"நிலையை புரிந்துக் கொண்டு ஒதுங்க வேண்டும்"


மான்களை காப்பாற்ற வேண்டும் என ஐஐடி மேற்கொள்ளும் நடவடிக்கையை பிறர் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்