கோயிலுக்கு சொந்தமான நிலம்; அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் - பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அனுமதி இன்றி கட்டுமானங்களை மேற்கொண்ட மாநகராட்சி பொறியாளர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-10 02:45 GMT
வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அனுமதி இன்றி கட்டுமானங்களை மேற்கொண்ட மாநகராட்சி பொறியாளர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வடபழனி நெற்குன்றம் பாதையில் உள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதி இன்றி, கோடம்பாக்கம் மண்டல செயற்பொறியாளர் வி.பெரியசாமி 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு கட்டடங்களை கட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டடங்களில், அம்மா உணவகம், நியாய விலை கடை,  சென்னை குடிநீர் வாரியம், மின் வாரியம் ஆகியவற்றின் அலுவலகங்களும் இயங்கி வந்துள்ளன.குத்தகைக் காலம் 2015ம் ஆண்டு முடிந்த நிலையிலும், அம்மா உணவகமும், நியாய விலை கடையும் தொடர்ந்து இயங்கியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் குற்றம் சாட்டிய நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட பொறியாளர் பெரியசாமி விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து, 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 







Tags:    

மேலும் செய்திகள்