உள்ளாட்சி தேர்தல்- அனைத்துக் கட்சி கூட்டம் - அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்பு

உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், மாலை 6 மணிக்குள் வாக்குப் பதிவை முடிக்க அனைத்துக் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-06 11:53 GMT
நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துவருகிறது. இதுகுறித்து, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள், தேமுதிக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளுடன், தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசித்தார். வாக்குப் பதிவை இரவு 7 மணி வரை நடத்த எதிர்ப்பு தெரிவித்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக கூறியுள்ளனர். தேர்தல் நடத்தும் நாள் குறித்து, வரும்15ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்