"திரைத்துறைக்கான விருதுகள் வழங்கவில்லை" - விருதுகள் வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை

கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள திரைத்துறை மற்றும் சின்னத்துறைக்கு விருதுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-06 11:11 GMT
தமிழ்நாடு அரசால் 1968ஆம் ஆண்டு முதல் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக திரைப்படம் மற்றும் சின்னத்துரைக்கான விருதுகளை மத்திய அரசு வழங்கவில்லை என சட்டமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுகான விடுபட்ட ஆண்டின் சிறந்த குறும்படங்களை தேர்வு செய்து விருதுகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.  மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு ஏற்ப அரசு பொருட்காட்சிகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்