"ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்" - பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்க முடிவு
ஸ்டெர்லைட் தொழிற்சலையை மீண்டும் திறக்க கோரி விரைவில் பிரதமர் அலுவலகத்தில் நேரில் மனு அளிக்க உள்ளதாக ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.;
ஸ்டெர்லைட் தொழிற்சலையை மீண்டும் திறக்க கோரி விரைவில் பிரதமர் அலுவலகத்தில் நேரில் மனு அளிக்க உள்ளதாக ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் போராட்டங்கள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடி இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து காப்பர் இறக்குமதி செய்ய கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளதாக கூறினர். இதனால் காப்பர் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.