கோவில் யானை பராமரிப்பு - நீதிமன்றம் உத்தரவு

வளர்ப்பு யானைகள் பராமரிப்பு விதிகள் படி, கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-27 12:26 GMT
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, யானைகள் புத்துணர்வு முகாமில் கோவில் யானையை பாகன் அடிப்பது போன்ற வீடியோ காட்சி குறித்து நீதிபதிகள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து  யானைகள் முறையாக பராமரிக்கப்படும் வகையில் புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுப்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய கொள்கை வகுப்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.. இதையடுத்து பராமரிப்பு சட்ட விதிகள் படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்