பாமக இரண்டு பக்கமும் பேரம் பேசியதாக திருமாவளவன் விமர்சனம்

பாமகவை போன்று இரண்டு பக்கமும் கூட்டணி பேரம் பேசும் கட்சி திமுக கூட்டணியில் இல்லை என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

Update: 2021-03-30 03:03 GMT
பாமகவை போன்று இரண்டு பக்கமும் கூட்டணி பேரம் பேசும் கட்சி திமுக கூட்டணியில் இல்லை என திருமாவளவன் விமர்சித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் திருவிடைமருதூர் தொகுதி திமுக வேட்பாளர் கோ.வி செழியனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பாஜக எப்போதுமே மக்களின் அடிப்படை பிரச்னைகளை பற்றி பேச மாட்டார்கள் என விமர்சித்தார். டெல்டாவை காப்பாற்ற வேண்டுமானால் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்