முதலமைச்சராக 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 4 ஆண்டுகளில் 20 ஆயிரத்து 500 கோப்புக்களில் கையெழுத்திட்டு சாதனை படைத்துள்ளார்.

Update: 2021-02-16 02:36 GMT
டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து பெரும் வரவேற்பை பெற்ற, முதலமைச்சர் பழனிசாமி, நீர் நிலைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் குடிமராமத்து திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தினார். காவிரியை முழுமையாக மீட்டெடுக்க "நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை அறிவித்தார். வெளிநாட்டு பயணம் மூலம், 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு என அறிவித்து பலரின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். மத்திய அரசிடம் இருந்து பல்வேறு விருதுகளை பெற்றுத்தந்துள்ள எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடன் ரத்து என்ற மெகா அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்