ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-30 16:07 GMT
இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதோடு, இந்து முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் ராம.கோபாலன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.


ராம.கோபாலன் மறைவுக்கு  தமிழக துணை முதலமைச்சர்  இரங்கல்




இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு  தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவுட்டுள்ள அவர்,  இராம கோபாலன் பிரிவால்வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும்  தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார்,.


இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு - திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் 



இந்து முன்னணி தலைவர், ராம கோபாலன் மறைவுக்கு,  திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனையுடன், சமயக் கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியான அவரது மறைவு பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்