முல்லை பெரியாறு அணை - கேரள அதிகாரி கருத்து

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டும்போது, தண்ணீர் திறந்துவிட தமிழக அரசை வலியுறுத்துவோம் என கேரள மின் வாரிய தலைவர் கே.எ.பிள்ளை தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-08 03:44 GMT
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டும்போது, தண்ணீர் திறந்துவிட தமிழக அரசை வலியுறுத்துவோம் என கேரள மின் வாரிய தலைவர் கே.எ.பிள்ளை தெரிவித்துள்ளார். மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், 10 ஆம் தேதி வரை கன மழை பெய்தாலும், இடுக்கி, இடமலையாறு அணைகளின் நீர்மட்டம் அச்சப்படும் அளவிற்கு உயராது என தெரிவித்தார்.  தற்போது முல்லை பெரியாறு அணை 132 அடியை எட்டியுள்ள நிலையில், 137 கன அடி உயரும் போது அணையை திறக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுகொண்டதாக தெரிவித்தார். உச்சநீதிமன்றம் 142 அடி வரை அனுமதி அளித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்
Tags:    

மேலும் செய்திகள்