"7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-08-01 09:04 GMT
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 
கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலும், மன்னார் வளைகுடா, அந்தமான் மற்றும் தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளிலும் இன்று, நாளையும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்