பட்டய கணக்காளர் தேர்வு - புதிய வழிமுறைகளை உருவாக்க அவகாசம் கோரியது இந்திய பட்டய கணக்காளர் அமைப்பு

பட்டய கணக்காளர் தேர்வுகளுக்கான புதிய வழிமுறைகளை வெளியிடுவதற்கு இந்திய பட்டய கணக்காளர் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கோரியுள்ளது.

Update: 2020-06-29 13:11 GMT
இந்த வழக்கு நீதிபதி ஏ.எம் கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் , தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பு புதிய வழிமுறைகளை வெளியிட வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த இந்திய பட்டய கணக்காளர் அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்வுகளை எழுதுவது 
மாணவர்களின் விருப்பத்திற்கே விடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார். மேலும் புதிய வழிமுறைகளை வெளியிட இந்திய பட்டய கணக்காளர் அமைப்பு அவகாசம் கோரியதால் , நீதிபதிகள் ஜூலை 2ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்