இன்று மாலை சேலம் செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சென்னையில் இருந்து சேலத்திற்கு புறப்படுகிறார்.

Update: 2020-06-24 03:30 GMT
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை சென்னையில் இருந்து சேலத்திற்கு புறப்படுகிறார். இரவு சேலத்தில் தங்கும் அவர், நாளை கோவைக்கு பயணம் மேற்கொள்கிறார். பின்னர், அங்கு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை ஆய்வு செய்து விட்டு, மீண்டும் சேலம் வரும் முதலமைச்சர், நாளை மறுநாள் சேலத்திலிருந்து திருச்சிக்கு பயணம் மேற்கொள்கிறார். பின்னர் அங்கு, குடிமராமத்து பணியை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 
==
Tags:    

மேலும் செய்திகள்