சென்னை புறநகர் பகுதியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - நோய் தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னையின் புறநகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2020-06-20 11:55 GMT
பல்லாவரம் நகராட்சியில் 359 பேரும், பம்மல் நகராட்சியில் 129 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை சென்று வருபவர்களால் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களை தனியாக கணக்கெடுத்து கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பல்லாவரம், பம்மல் பகுதியில் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், நோய் பரவலை தடுக்க இந்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்றும், தனி அதிகாரிகளை நியமித்து அரசு பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் நுழையும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மாவட்டத்திற்குள் நுழைய அனுமதித்தால் மட்டுமே நோய் பரவலை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறுகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்