சென்னையில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து - 63 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Update: 2020-06-07 04:54 GMT
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் வசதிக்காக 63 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், மாணவர்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேருந்துகள் நாளை முதல் 13ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பேருந்தில் 24 பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்