வேளாண் பொருட்களை விற்பனை - தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது

வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் போது விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

Update: 2020-06-02 12:20 GMT
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,வேளாண் பொருட்கள் விற்பனை ஒழுங்குபடுத்துதல் சட்டம், 1987ல் கூடுதல் சீர்திருத்தங்களுடன் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் விளைபொருட்களை தங்கள் பண்ணையிலோ அல்லது உணவுப் பூங்கா வளாகங்களிலோ அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும் பொழுது அவர்களிடமிருந்து விற்பனைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விற்பனைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலம், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்