போலி வருமானவரித்துறை அதிகாரி கைது - சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார்

ராமநாதபுரம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய போலி வருமானவரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-05-31 11:08 GMT
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் வருமானவரித்துறை பெயர் பொறிக்கப்பட்ட காரில் சிலர் சுற்றித் திரிந்துள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை பிடித்து விசாரித்ததில்,  துத்திவலசை கிராமத்தை சேர்ந்த சதீஷ்கண்னன் என்பவர் போலியான பெயர் பலகையுடன் சொகுசு காரில் வலம் வந்தது தெரியவந்துள்ளது.இதையடுத்து சதீஷ் கண்ணனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்து, அவரிடமிருந்து சொகுசு காரை பறிமுதல் செய்தனர். மேலும் ஏற்கனவே சதீஷ் கண்ணன் கொலை சம்பவம் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்