கொரோனா அறிகுறியை கண்டறிய ஸ்மார்ட் வாட்ச் வடிவிலான சாதனம் - சென்னை ஐ.ஐ.டி தயாரிப்பு

கொரோனா அறிகுறியினை முன்கூட்டியே கண்டறிய ஸ்மார்ட் வாட்ச் வடிவிலான புதிய சாதனத்தை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.

Update: 2020-05-19 03:35 GMT
சென்னை ஐஐடியில் உள்ள தொழில் முனைவோர் மையத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தை கையில் கட்டும்போது, நமது உடலின் வெப்பநிலை, இதய துடிப்பு மற்றும் ரத்த ஆக்ஸிஜன் செறிவு உணர்திறன் ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும். உடல் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள இயலும் என்பதால், கொரோனா நோய் தொற்றிலிருந்து முன்கூட்டியே தற்காத்துகொள்ள இயலும் என சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. புளூ-டூத் உதவியுடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனம், சென்னை ஐ.ஐடியின் "மியூஸ் ஹெல்த் ஆப்" என்ற மொபைல் செயலியுடன் இணைந்து செயல்படும். இதனால், இந்த சாதனத்தை  பயன்படுத்துபவரின் உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன் செறிவு அளவுகளின் தரவு ஆகியவற்றை பெற முடியும். மேலும், கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளுக்குள் செல்லும்போது,  ஆரோக்யா சேது செயலியில் இருந்து எச்சரிக்கை தகவல் பெற முடியும்.  அடுத்த 20 நாட்களில் இந்த சாதனத்தை  செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்