டெல்லியில் இருந்து 214 பேர் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை - மொத்தம் 594 பேர் தமிழகம் வந்தனர்

தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 594 பேர் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் நேற்று இரவு தமிழகம் வந்தனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Update: 2020-05-18 02:43 GMT
டெல்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில், தமிழகத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். ஊரடங்கு காரணமாக அவர்கள் தமிழகம் திரும்ப முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில்,  594 பேர் டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் தமிழகம் வந்தனர். 

தமிழகத்தின் 12 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளை சேர்ந்த மொத்தம் 214 பேர் தாம்பரம் ரயில்நிலையத்தில் இறங்கினர்.  அங்கிருந்து 25 பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்டு தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். 

அந்த சிறப்பு ரயிலில் வந்த மற்ற 16 மாவட்டங்களைச் சேர்ந்த 310 பேர் திருச்சி ரயில் நிலையத்தில் இறங்கினர்.  

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 70 பேர் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இறங்க உள்ளனர். 

இந்த சிறப்பு ரயிலில் தப்லீக் ஜமாத்தினர்  வந்ததால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது .
Tags:    

மேலும் செய்திகள்