"ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் ரூ.100 அபராதம்"

சென்னையில் விதிமுறைகளை மீறினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-02 03:06 GMT
சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்கள், பொதுத்துறை நிறுவன அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், மளிகை கடைகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளை சுத்தப்படுத்தும் திரவங்களை கட்டாயம் வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் கடைகள், நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்